வியட்நாம் பிரபஞ்ச அழகியான பிக்குனி மிஹிந்தலை விகாரையை வழிபாடு
துறவியாக மாறுவதற்கு முன்பு, அவர் நான்கு முறை மிஸ் வியட்நாம் மற்றும் ஐந்தாவது முறையாக மிஸ் யுனிவர்ஸ் என்று முடிசூட்டப்பட்டார்.

பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடிய வியட்நாம் பிரஜை எலிசபெத் சுஜாதா பிக்குனியாக பதவியேற்றதன் 15வது ஆண்டு நிறைவை முன்னிட்டு முதன்முறையாக இலங்கை விஜயம் செய்து வரலாற்று சிறப்புமிக்க மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்கு நேற்று முன்தினம் (27) விஜயம் செய்தார்.
துறவியாக மாறுவதற்கு முன்பு, அவர் நான்கு முறை மிஸ் வியட்நாம் மற்றும் ஐந்தாவது முறையாக மிஸ் யுனிவர்ஸ் என்று முடிசூட்டப்பட்டார்.
பின்னர் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்து, எல்லா சுகங்களையும் விட்டுவிட்டு துறவியின் வாழ்க்கையில் நுழைய முடிவு செய்து பிக்குனியாக வாழ்ந்து வருகிறார்.