7 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது ’ஓபன்ஹெய்மர்’ திரைப்படம்
ஓபன்ஹெய்மர் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 96-வது ஒஸ்கர் விழா நடைபெற்று வரும் நிலையில், ஓபன்ஹெய்மர் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.
சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த எடிட்டிங், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளது.
அதேபோல் சிறந்த நடிகர் விருதையும் வென்றுள்ளது. அந்தப் படத்தில் நடித்துள்ள சிலியான் முர்பி இந்த நடிகர் விருதை பெற்றுள்ளார்.
சிறந்த இயக்குனர் விருதையும் ஓபன் ஹெய்மர் வென்றுள்ளது. அந்த படத்தினர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வென்றுள்ளார். சிறந்த படத்திற்கான விருதையும் இத்திரைப்படம் வென்றுள்ளது.