அஸ்வெசும புதிய விண்ணப்பதாரிகளுக்கு வெளியான அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மார்ச் மாதம் 22ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட நிவாரணத் திட்டத்துக்கான விண்ணப்பங்களை அனுப்பும் காலம் நாளை(15) நிறைவடையவிருந்த நிலையிலேயே விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதயும் படிங்க: 10 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட அஸ்வெசும பணத்தை மீளப் பெற நடவடிக்கை
மேலும், இரண்டாம் கட்ட நிவாரணத் திட்டத்துக்கு இதுவரை 130,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.