எல்பிட்டிய உள்ளுராட்சி மன்ற தேர்தல் - எந்தவொரு கட்சியும் கட்டுப்பணம் செலுத்தவில்லையாம்!
கட்டுப்பணத்தை ஏற்கும் நடவடிக்கை செப்டம்பர் 11-ம் திகதி மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது.

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய உள்ளுராட்சி மன்றத்திற்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
பிணைப் பணத்தை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போதிலும், நேற்று (30) வரை எந்தவொரு குழுவும் அல்லது தரப்பினரும் கட்டுப்பணத்தை வைப்பிலிடவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுப்பணத்தை ஏற்கும் நடவடிக்கை செப்டம்பர் 11-ம் திகதி மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது.
அத்துடன், எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் அதிகாரியினால் கடந்த 26 ஆம் திகதி வாக்கெடுப்புக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.