MISS UNIVERSE TAMIL SRILANKA- 2023 மகுடத்தை நிவேதிதா சூடினார்

இறுதிப் போட்டிக்கு தெரிவான 15 யுவதிகளிலிருந்து Miss Best Hair, Miss Best Skin, Miss Best Congeniality, Miss fitness, Miss Personality, Miss Photogenic, Miss popularity, Miss Telent, Miss top model  ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

நவம்பர் 22, 2023 - 20:18
நவம்பர் 24, 2023 - 01:05
MISS UNIVERSE TAMIL SRILANKA- 2023 மகுடத்தை நிவேதிதா சூடினார்

இத்தனை வருடங்களும் இலங்கையில் தமிழ் யுவதிகளுக்கான மணப்பெண்களுக்கான போட்டிகள் மாத்திரமே நடத்தப்பட்டு வந்த நிலையில், முதற்தடவையாக தமிழ்ப் பெண்களுக்கான அழகு இராணிப் போட்டியாக MISS UNIVERSE TAMIL SRILANKA நடத்தப்பட்டது.

அது  மிகவும் சிறப்பாகவும் பிரமாண்டான முறையிலும் இந்த மாதம் 17ஆம் திகதி   கொழும்பு- மெரினா பீச் ஹோட்டலில்  நடத்தப்பட்டது.

இப்போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து 100க்கும் மேற்பட்ட  போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், இதன்  முதற்கட்ட தேர்வுகள் மட்டக்களப்பில் இரண்டாம் கட்ட தேர்வுகள் வவுனியாவில் மூன்றாம் கட்டத் தேர்வுகள் யாழ்ப்பாணத்திலும்  அரையிறுதி மற்றும் இறுதிக்கட்ட தேர்வுகள் கொழும்பு- மெரீனா பீச் ஹோட்டல் மற்றும்  குளோபல் டவர் ஹோட்டலில் இரண்டு மாதங்களுக்கு முன்னரே நடைபெற்றிருந்தன.

இதன்போது முதற்கட்டமாக  யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, கேகாலை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலிருந்து 120 யுவதிகள் தெரிவு செய்யப்பட்டு அதிலிருந்து 30 யுவதிகள் இரண்டாம் கட்டத்துக்கு  தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த 30 பேருக்குமான பல்வேறு பயிற்சிகள் கொழும்பில் சில வாரங்கள் நடத்தப்பட்டதுடன் இதிலிருந்து 15 பேர் இறுதிப் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

குறித்த 15 பேரில் MISS UNIVERSE TAMIL SRILANKA- 2023 மகுடத்தை  வவுனியாவைச் சேர்ந்த நிவேதிதா ராசையா  சூடிக்கொண்டார்.

இரண்டாமிடத்தை  மாத்தளையைச் சேர்ந்த  ஐஸ்வர்யா, மூன்றாவது இடத்தை கொழும்பைச் சேர்ந்த விதுசா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இறுதிப் போட்டிக்கு தெரிவான 15 யுவதிகளிலிருந்து Miss Best Hair, Miss Best Skin, Miss Best Congeniality, Miss fitness, Miss Personality, Miss Photogenic, Miss popularity, Miss Telent, Miss top model  ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இறுதிப் போட்டியின் நடுவர்களாக திருமதி திவ்யா சுஜேன், திருமதி சத்யபிரியா ரட்ணசாமி, திருமதி சர்மிளா தர்மேந்திரா, திருமதி அனுசா ராஜ்மோகன், திருமதி ப்ரியா சங்கர் ஆகியோர் பங்காற்றியிருந்தனர்.

இந்நிகழ்வு  Karan Kailayar - Founder ( Can Lanka (Pvt) Ltd),   Akila Baskaran (Vice President)  ,  W.Vijendran (Event Director),  - Maan Vizhi (National Director ) Tymeron Carvalho (Choreographer)  ஆகியோரால் சிறப்பாக ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு அனைவரது பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்நிகழ்வை தமிழ் மொழியில் பிரசன்னா பத்மநாதனும் ஆங்கிலத்தில்  கம்யா விஜேதாச ஆகியோர் சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கியிருந்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!