“புதிய தொடக்கத்தின் அடித்தளம்” - ஜனாதிபதி அநுரவின் முதல் உரை
தேர்தல்கள் ஆணைக்குழுவில் வைத்து ஜனாதிபதியாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

-பிறின்சியா டிக்சி
அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்தப் புதிய தொடக்கத்தின் அடித்தளமாகும் என இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
அத்துடன், மக்களுக்கு நன்றி தெரிவித்து அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றினார்.
“பல காலமாக இருந்த கனவு இறுதியாக நனவாகியுள்ளது. இந்த சாதனை நூறாயிரக்கணக்கான உங்களின் கூட்டு முயற்சியாகும். மக்களின் அர்ப்பணிப்பு எம்மை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது.
இந்த கனவை புதிய தொடக்கத்தில் மட்டுமே நனவாக்க முடியும். இன, மத, மொழி பேதமின்றி அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்தப் புதிய தொடக்கத்தின் அடித்தளமாகும். நாம் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம்” என்றார்.