8000 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் களத்தில்...
அவர்கள் 22 தேர்தல் மாவட்டங்களையும் உள்ளடக்கிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்களின் பாதுகாப்பிற்காக, சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுமார் 8000 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தடன், 116 பேர் சர்வதேச கண்காணிப்பாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்களில் 78 ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களும் 22 பொதுநலவாய கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.
மேலும், ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பில் இருந்து 9 பேரும், தெற்காசிய பிராந்திய நாடுகளின் 7 பிரதிநிதிகளும் இந்த ஆண்டு தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்கு வந்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவர்கள் 22 தேர்தல் மாவட்டங்களையும் உள்ளடக்கிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், அவர்களின் பாதுகாப்பிற்காக, சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அத்துடன், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் அல்லது பாஃபெரல் அமைப்பிலிருந்து 4,000க்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.