இலங்கையில் விபத்துகளால் வருடாந்தம் 12,000க்கும் மேற்பட்டோர் பலி
விபத்துகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 2,500 முதல் 3,000 நோயாளிகள் இறுதியில் காயங்களிலேயே இறக்கின்றனர்.

கொழும்பு, ஜூலை 8 (நியூஸ்21) - இலங்கையில் வருடாந்தம் சுமார் 12,000 பேர் விபத்துக்களால் உயிரிழப்பதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று முதல் ஜூலை 11 வரை நடைபெறும் 10வது தேசிய காயம் தடுப்பு வாரத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
விபத்துகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 2,500 முதல் 3,000 நோயாளிகள் இறுதியில் காயங்களிலேயே இறக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதற்கு விபத்து காயங்கள் ஒரு முக்கிய காரணம் என்றும், இதன் காரணமாக நாடு தழுவிய விழிப்புணர்வு பிரசாரத்தை அமைச்சு தொடங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஏழு இலங்கையர்களில் குறைந்தது ஒருவர், ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கவனிப்பு தேவைப்படும் உயிருக்கு ஆபத்தான விபத்தை எதிர்கொள்கிறார் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துன், நாட்டில் ஒவ்வொரு நிமிடமும் ஆறு முதல் எட்டு நபர்கள் சிகிச்சை தேவைப்படும் காயங்களுக்கு ஆளாகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அதிகளவானவர்கள் 15 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் என அவர் கூறியுள்ளார்.