ஹோமாகம தீ விபத்து தொடர்பில் வெளியான தகவல்

ஹோமாகம கட்டுவன பிரதேசத்தின் கைத்தொழில் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 18, 2023 - 12:48
ஹோமாகம தீ விபத்து தொடர்பில் வெளியான தகவல்

ஹோமாகம கட்டுவன பிரதேசத்தின் கைத்தொழில் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது.

பெயின்ட் தொழிற்சாலையும் ஜவுளி தொழிற்சாலையும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு (17) ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் பொருட்டு ஹொரணை மற்றும் கோட்டே தீயணைப்பு பிரிவுகளில் இருந்து 07 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டதுடன், பனாகொட இராணுவ முகாம் தீயணைப்பு பிரிவின் வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

தீயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்காக இராணுவக் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.

இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று பிற்பகல் ஹகுரன்கெத்த நாரங்கமடில்ல பகுதியில் தீ பரவியதாகவும், சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உப்புவெளி வெல்கம்வெஹர வனப்பகுதியில் நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீயினால் சுமார் 05 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!