இறக்குமதிக்கு பின்னர் வாகனங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படும்
வாகன இறக்குமதி மூன்று கட்டங்களின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்படும் .

பெப்ரவரி மாதம் முதல் மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பிக்கும் போது வாகனங்களின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ஹேரத், வாகன இறக்குமதி மூன்று கட்டங்களின் கீழ் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும், மூன்றாவது கட்டமாக தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதயும் படிங்க: அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம்
அன்னியச் செலாவணியைப் பாதுகாக்கும் அதே வேளையில் வாகன இறக்குமதிகள் அனுமதிக்கப்படும் என்றும், வரி விதிப்பில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளூர் சந்தைக்கு வரும் போது, தற்போதைய போட்டி விலைகளின் அடிப்படையில், வாகனங்களின் விலை குறையலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, ஐந்தாண்டு பதவிக்காலத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடுக்கப்பட்ட வாகனத்தை 05 வருடங்களின் முடிவில் அரசாங்கம் திரும்பப் பெறலாம் அல்லது பதவிக்காலத்தின் முடிவில் வாகனத்தின் பெறுமதியை உறுப்பினர்கள் செலுத்தி வாகனத்தை தமக்கு சொந்தமாக்கி கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.