மாதாந்த ரீதியில் கட்டணம் வசூலிக்க திட்டமிடும் மெட்டா

ட்விட்டர் பயனர்களிடமிருந்து மாதாந்த ரீதியில் கட்டணம் வசூலிக்கும் சேவை குறித்த அறிவிப்பை ட்விட்டரின் உரிமையாளர் எலோன் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

Feb 21, 2023 - 08:02
மாதாந்த ரீதியில் கட்டணம் வசூலிக்க திட்டமிடும் மெட்டா

ட்விட்டர் பயனர்களிடமிருந்து மாதாந்த ரீதியில் கட்டணம் வசூலிக்கும் சேவை குறித்த அறிவிப்பை ட்விட்டரின் உரிமையாளர் எலோன் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

அதனுடன் இணைந்து , மெட்டா ( Meta) நிறுவனம் மாதாந்த சந்தா சேவையை 11.99 டொலர் முதல் தொடங்கும் என்று அதன் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

இந்த புதிய Meta Verified சேவை முதலில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள பேஸ்புக் (Facebook) மற்றும் (Instagram) பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

"இந்த புதிய அம்சம் எங்கள் சேவைகள் முழுவதும் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கிறது" என்று மெட்டாவின் CEO மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்.

Facebook மற்றும் Instagram இல் ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட கணக்குகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட பயனர்கள் மட்டுமே இந்த சேவைக்கு குழுசேர அனுமதிக்கப்படுவார்கள்.

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்