ஹட்டன் நகரில் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்
ஆர்பாட்டகாரர்கள் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதனால் பொது போக்குவரத்து பல மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டன.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் நேற்று காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.
ஆர்பாட்ட காரர்கள் வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதனால் பொது போக்குவரத்து பல மணித்தியாலங்கள் பாதிக்கப்பட்டன.
இதனால் டிக்கோயா, நோர்வூட், பொகவந்தலாவை, மஸ்கெலியா, போடைஸ், தலவாக்கலை, கொழும்பு கண்டி ஊடான பிரதான வீதிகளின் பொதுப் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகி இருந்தன.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டிக்கோயா பகுதியில் வீதியை மறித்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் டிக்கோயா ஊடான பொதுப் போக்குவரத்து பல மணித்தியாலங்கள் தடைப்பட்டது. பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்ற பின்னர் பொதுப் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.