2026 ஆம் ஆண்டின் முதல் செவ்வாய் பெயர்ச்சி: எந்த ராசிக்கு லாபம், யாருக்கு எச்சரிக்கை?

2026 ஆம் ஆண்டின் முதல் செவ்வாய் பெயர்ச்சி ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற்றது. இந்த பெயர்ச்சியின் போது செவ்வாய் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைந்துள்ளார்.

ஜனவரி 18, 2026 - 08:04
2026 ஆம் ஆண்டின் முதல் செவ்வாய் பெயர்ச்சி: எந்த ராசிக்கு லாபம், யாருக்கு எச்சரிக்கை?

ஜோதிடத்தில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய் பகவான். தைரியம், வீரம், துணிச்சல், சக்தி ஆகியவற்றின் காரணியாக விளங்கும் செவ்வாய், மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிகளின் அதிபதியாகவும் இருக்கிறார். பொதுவாக ஒரு ராசியில் செவ்வாய் அதிகபட்சமாக 45 நாட்கள் வரை தங்குவார்.

அந்த வகையில், 2026 ஆம் ஆண்டின் முதல் செவ்வாய் பெயர்ச்சி ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற்றது. இந்த பெயர்ச்சியின் போது செவ்வாய் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைந்துள்ளார். மகர ராசியில் செவ்வாய் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை தங்கி, அதன் பின்னர் கும்ப ராசிக்குள் பெயர்ச்சி அடைவார். இந்த செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் வெளிப்படும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 10-ஆவது வீட்டில் சஞ்சரிப்பதால், தொழில் தொடர்பான சவால்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாகி மன அழுத்தம் ஏற்படலாம். பொறுமையுடன் செயல்படுவது அவசியம்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 9-ஆவது வீட்டில் இருப்பதால், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். எந்த முடிவையும் அவசரமாக எடுக்காமல் கவனத்துடன் செயல்பட வேண்டும். உறவுகளில் நேர்மை இல்லாவிட்டால் மனஸ்தாபம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 8-ஆவது வீட்டில் பயணம் செய்வதால், வேலை விஷயங்களில் கூடுதல் முயற்சி தேவைப்படும். குறுக்கு வழிகளில் பணம் ஈட்ட முயற்சிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் இழப்புகள் ஏற்படலாம். வேலை தொடர்பான புதிய பயணங்களை ஒத்திவைப்பது நல்லது.

கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 7-ஆவது வீட்டில் இருப்பதால், தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் சந்தர்ப்பமும் உருவாகலாம்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 6-ஆவது வீட்டில் சஞ்சரிப்பதால், நீண்ட நாட்களாக நினைத்த ஆசைகள் நிறைவேறும். வீடு வாங்கும் கனவு நனவாகலாம். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். குடும்பம் மற்றும் உறவுகளில் இனிமை நிலவும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 5-ஆவது வீட்டில் இருப்பதால், நிதி தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம். காதல் வாழ்க்கையில் கவனம் தேவை. தொழிலில் சற்று மந்தநிலை காணப்படும். வியாபாரிகள் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காமல் போகலாம்.

துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 4-ஆவது வீட்டில் இருப்பதால், மிதமான பலன்களே கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். ஆனால் வேலையில் கவனக்குறைவு ஏற்பட்டால் சிக்கல்கள் உருவாகலாம்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 3-ஆவது வீட்டில் இருப்பது சாதகமான பலன்களை தரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் உயரும். காதல் மற்றும் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 2-ஆவது வீட்டில் சஞ்சரிப்பதால், நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் தெளிவாக தெரியும்.

மகர ராசிக்காரர்களுக்கு செவ்வாய் முதல் வீட்டில் இருப்பதால், வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். தொழில் ரீதியாக சவால்கள் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்தி செயல்படுவது அவசியம்.

கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 12-ஆவது வீட்டில் சஞ்சரிப்பதால், வேலை தொடர்பான பயணங்கள் ஏற்படலாம். அந்த பயணங்களில் கவனக்குறைவு தவிர்க்கப்பட வேண்டும். செலவுகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் 11-ஆவது வீட்டில் இருப்பதால், தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பல வழிகளில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். வருமானம் அதிகரித்து நிதி நிலை வலுப்படும்.

மேற்கண்ட தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் ஜோதிட அனுமானங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டவை. இது தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட ஜோதிட நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!