மஷாத் புனித நகரில் அயதுல்லா அலி காமேனியின் உடல் நல்லடக்கம்: ஈரானில் தொடரும் போர் பதற்றம்!

காமேனியின் விருப்பப்படியும் அவரது குடும்பத்தினர் முடிவின்படியும், மஷாத்தில் உள்ள அவரது தந்தையின் நினைவிடத்திற்கு அருகிலேயே காமேனியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

மஷாத் புனித நகரில் அயதுல்லா அலி காமேனியின் உடல் நல்லடக்கம்: ஈரானில் தொடரும் போர் பதற்றம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உடல், ஈரானின் புனித நகரமான மஷாத்தில் (Mashhad) இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது.

கடந்த 28-ஆம் தேதி ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தற்போது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

காமேனியின் விருப்பப்படியும் அவரது குடும்பத்தினர் முடிவின்படியும், மஷாத்தில் உள்ள அவரது தந்தையின் நினைவிடத்திற்கு அருகிலேயே காமேனியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இதற்கான விரிவான ஏற்பாடுகள் புனித நகரமான மஷாத்தில் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, காமேனியின் மறைவுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் ஐந்தாவது நாளாகத் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

குவைத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT