நியூசிலாந்தில் முதன்முறையாக வாகன ஓடோமீட்டர் மோசடி: இலங்கையரால் நடத்தப்படும் நிறுவனத்துக்கு தண்டனை

வாடிக்கையாளருக்கு விற்கப்படும் போது அதன் ஓடோமீட்டர் அளவு குறைக்கப்பட்டு, 119,244 கிலோமீற்றர் என்று காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 30,000 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் மறைக்கப்பட்டு, மோசடி செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் முதன்முறையாக வாகன ஓடோமீட்டர் மோசடி: இலங்கையரால் நடத்தப்படும் நிறுவனத்துக்கு தண்டனை
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நியூசிலாந்தில் வாகனத்தின் ஓடோமீட்டர் (Odometer) அளவை மாற்றிய மோசடி வழக்கில், இலங்கையரால் நிர்வகிக்கப்படும் பழைய கார் விற்பனை நிறுவனம் ஒன்றுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. 

நியூசிலாந்தின் மோட்டார் வாகன விற்பனைச் சட்டத்தின் கீழ் (Motor Vehicle Sales Act), ஓடோமீட்டர் மோசடிக்காக வெற்றிகரமாகத் தொடரப்பட்ட முதல் வழக்கு இதுவென கிறிஸ்ட்சர்ச் நகரைச் சேர்ந்த 'தி பிரஸ்' (The Press) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கிறிஸ்ட்சர்ச் நகரில் 'Sachis Holdings Ltd' என்ற நிறுவனத்தால் நடத்தப்படும் 'Carporium' என்ற கார் விற்பனை நிலையம், 2024 பெப்ரவரி மாதம் டொயோட்டா RAV4 ரக கார் ஒன்றை, 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கு விற்பனை செய்தது. 

ஓராண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட வழக்கமான வாகனப் பராமரிப்பு சேவையின் போது, அந்த வாகனத்தின் ஓட்ட அளவுக்கும், அதன் சேவை வரலாற்றுக்கும் இடையே முரண்பாடு இருப்பதை தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டறிந்தனர்.

நியூசிலாந்தின் வர்த்தகம், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (MBIE) நடத்திய விசாரணையில், ஆக்லாந்து வாகன ஏலத்தில் அந்த கார் வாங்கப்பட்ட போது 150,031 கிலோமீற்றர் ஓடியிருந்தமை கண்டறியப்பட்டது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

ஆனால், வாடிக்கையாளருக்கு விற்கப்படும் போது அதன் ஓடோமீட்டர் அளவு குறைக்கப்பட்டு, 119,244 கிலோமீற்றர் என்று காட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 30,000 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் மறைக்கப்பட்டு, மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னதாகவே, மோசடி செய்யப்பட்ட வாகனத்தை அதன் அசல் விற்பனை விலையான 24,000 நியூசிலாந்து டொலர்களுக்கே மீண்டும் வாங்கிக்கொள்ள 'Carporium' நிறுவனம் சம்மதித்தது. 

இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்துக்கு 5,000 நியூசிலாந்து டொலர்கள் அபராதம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 1,000 நியூசிலாந்து டொலர்கள் நஷ்டஈடு வழங்க  நிறுவனத்தின் இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டது.

வாகனத்தின் மதிப்பு, நிலை மற்றும் பராமரிப்பு வரலாறு குறித்து நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் இத்தகைய மோசடிச் செயல்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளப்படாது என்று நியூசிலாந்து அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -