வெனிசுலா நிலநடுக்கம் - பலி 188 ஆக உயர்வு; 1,500-க்கும் மேற்பட்டோர் காயம்! 250 கட்டிடங்கள் சேதம்

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் நிலநடுக்கங்களின் பலி எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளது. 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வெனிசுலா நிலநடுக்கம் - பலி 188 ஆக உயர்வு; 1,500-க்கும் மேற்பட்டோர் காயம்! 250 கட்டிடங்கள் சேதம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களினால் குறைந்தது 188 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தங்களினால் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

கட்டிட சேதம்

கராகஸ் (Caracas) மற்றும் லா குவைரா (La Guaira) மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மொத்தமாக 250-க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இடிபாடுகளுக்குள் மீட்புப் பணியாளர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

காயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் தீவிரம்

வெனிசுலாவில் நேற்று (25) 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளிலான ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கமானது, 1900 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வெனிசுலாவைத் தாக்கிய மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக பதிவாகியுள்ளது.

சர்வதேச உதவிகள்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் உதவி தெரிவித்துள்ளனர். பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மீட்புக் குழுக்களை அனுப்ப முன்வந்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT