கிழக்கு சீனாவை தாக்கிய டொல்பின் சூறாவளி - 1951க்கு பின் மிகப்பெரிய புயல் பேரிடர்

மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் கனமழையுடன் வீசிய டொல்பின் சூறாவளி கிழக்கு சீனாவைத் தாக்கியது. 1951க்குப் பின் மிகப்பெரிய இந்தப் புயலில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

கிழக்கு சீனாவை தாக்கிய டொல்பின் சூறாவளி - 1951க்கு பின் மிகப்பெரிய புயல் பேரிடர்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கிழக்கு சீனாவின் கடற்கரைப் பகுதிகளை கடுமையாக பாதித்துள்ள டொல்பின் சூறாவளி, மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றையும் கனமழையையும் கொண்டு வந்துள்ளது.

1951 ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்பகுதியை பாதித்த மிகப்பெரிய சூறாவளி இதுவாகும் என்று வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. இந்த புயலின் தாக்கம் சராசரியாக 12 நாட்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

வடகிழக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 250 முதல் 500 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதுடன், சிறிய ஆறுகளை ஒட்டிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் மலைப்பாங்கான பிரதேசங்களில் நிலச்சரிவும் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த பாதிப்புகளை கருத்தில் கொண்டு கிழக்கு சீனா முழுவதும் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்தப்பட்டுள்ளனர். 

மேலும், பல முக்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த சூறாவளியின் தாக்கம் சீனாவை மட்டுமின்றி பிலிப்பைன்ஸையும் பாதித்துள்ளது. அங்கு கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 380,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT