அந்த தங்கத்த தூக்கிட்டு வாங்கடா.. 2 போட்டியிலும் வெறித்தன சம்பவம் செய்த லபுஷேன்!
உலகக்கோப்பை 2023: உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. அதில் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி பங்கேற்றுள்ளது.

உலகக்கோப்பை 2023: உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. அதில் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷேன் தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி பங்கேற்றுள்ளது.
இந்த தொடரில் ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் காயம் காரணமாக விலகியதால், லபுஷேனும் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
இருப்பினும் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனில் லபுஷேன் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் கேமரூன் க்ரீனுக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக, மாற்று வீரர் லபுஷேன் களமிறங்கினார்.
113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறிய நிலையில் தனியாளாக போராடி 80 ரன்கள் சேர்த்து ஆஸ்திரேலியாவை வெற்றிபெற வைத்தார். இதன் காரணமாக 2வது ஒருநாள் போட்டியிலும் லபுஷேனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இன்று நடைபெற்று வரும் 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. 12 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 109 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், லபுஷேன் களமிறங்கினார்.
இந்தியா கூட படைக்காத சாதனை.. பங்களாதேசத்தை வீழ்த்தி சாதித்த இலங்கை.. வெறித்தனம் காட்டிய பதிரன!
இவரும் டேவிட் வார்னரும் அதிரடியில் பொளந்து கட்ட ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் எகிறியது. சிறப்பாக ஆடிய லபுஷேன் 54 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில், அதிரடியை அடுத்த கியருக்கு மாற்றினார்.
தொடர்ந்து பவுண்டரிகளை விளாசிய லபுஷேன், அடுத்த 26 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இறுதியாக 99 பந்துகளில் 19 பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் உட்பட 124 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படாத லபுஷேன், அடுத்தடுத்த ஆட்டங்களில் மிரட்டலான இன்னிங்ஸை ஆடியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.