அரிசியை அதிக விலைக்கு விற்றால் கடும் சட்ட நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

செப்டெம்பர் 8, 2023 - 13:50
செப்டெம்பர் 8, 2023 - 13:51
அரிசியை அதிக விலைக்கு விற்றால் கடும் சட்ட நடவடிக்கை

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பில் நாடளாவிய ரீதியாக  சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான முறைக்கேடுகள் தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம்  நுகர்வோர் விவகார அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, அரிசிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, கீரி சம்பா 260 ரூபாய், சம்பா 230 ரூபாய்,  நாடு 220 ரூபாய், சிவப்பு பச்சை அரிசி 210 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலை ஆகும்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கே அரிசியை விற்பனை செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை வர்த்தகர்களிடம் வலியுறுத்தி உள்ளது.

அரிசியை அதிக விலைக்கு விற்கும் தனிப்பட்ட வர்த்தகருக்கு குறைந்தபட்சம் 1 இலட்சம் ரூபாய் முதல் அதிகபட்சம் 5 இலட்சம் ரூபாய் வரை அபராதமும்,  தனியார் நிறுவனத்துக்கு குறைந்தபட்சம் 5 இலட்சம் ரூபாய் முதல் 5 மில்லியன் ரூபாய் வரை அபராத விதிக்கப்படலாம் என அந்த அதிகார சபை கூறியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!