கர்ப்பிணிகளுக்கான கல்சியம், வைட்டமின் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு
அதேவேளை, கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயைத் தடுக்க சிறுமிகளுக்கு வழங்கப்படும் HPV தடுப்பூசியும் ஒரு வருடமாக கிடைக்கவில்லை என்றும் தெரியவருகின்றது.

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமாகத் தேவைப்படும் கல்சியம் மற்றும் வைட்டமின் மாத்திரைகளுக்கு நாட்டில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்பட வேண்டிய இந்த மாத்திரைகள் கடந்த பல மாதங்களாக அங்கு வழங்கப்படுவதில்லை என கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்மார்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: வடகொரியாவில் தலைவிரித்தாடும் புதிய பிரச்சினை: சோகத்தில் மக்கள்!
இதனால் கல்சியம், வைட்டமின் மாத்திரைகளை தாம் மருந்தகங்களில் பணத்தை செலவளித்த வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயைத் தடுக்க சிறுமிகளுக்கு வழங்கப்படும் HPV தடுப்பூசியும் ஒரு வருடமாக கிடைக்கவில்லை என்றும் தெரியவருகின்றது.