வடகொரியாவில் தலைவிரித்தாடும் புதிய பிரச்சினை: சோகத்தில் மக்கள்!

வடகொரிய மக்களின் தலைமுடி வேகமாக உதிர்கிறதாம். அதனால் அவர்களின் தலை சீக்கிரமே வழுக்கையாகிவிடும் என்ற அபாயம் உள்ளது.

நவம்பர் 29, 2023 - 00:52
வடகொரியாவில் தலைவிரித்தாடும் புதிய பிரச்சினை: சோகத்தில் மக்கள்!

வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு பதிலாக வடகொரியா மக்கள் தற்போது விவாதத்துக்கு வந்துள்ளனர். அங்குள்ள மக்கள் தற்போது ஒரு பெரும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். 

அதாவது, வடகொரிய மக்களின் தலைமுடி வேகமாக உதிர்கிறதாம். அதனால் அவர்களின் தலை சீக்கிரமே வழுக்கையாகிவிடும் என்ற அபாயம் உள்ளது.

நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி, முடி உதிர்தல் தொற்றுநோய் வட கொரியாவில் வேகமாக பரவுகிறது என்று தென் கொரிய நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம் வட கொரியாவில் பயன்படுத்தப்படும் சோப்பு மற்றும் சலவை சோப்புகள் என்று நிபுணர்கள் குற்றம் சாட்டினர்.

இதையும் படிங்க: இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் வாய்ப்பு? மாஸ்டர் பிளான்!

வடகொரியர்கள் பயன்படுத்தும் சோப்பு மற்றும் சலவை சோப்புகளில் அதிக அளவு ரசாயனங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் விரைவான முடி உதிர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் வடகொரியாவில் ராணுவம் தொடர்பாக கடுமையான விதிமுறை உள்ளது. அனைத்து உடல் திறன் கொண்ட ஆண்களும் பொதுவாக ஆயுதப்படையில் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். 

பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் பணிபுரிந்து வருவதால், அவர்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சினை அதிகமாக உள்ளது. தற்போது வடகொரியாவில் மட்டுமின்றி தென்கொரியாவிலும் திடீரென முடி உதிர்வது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!