மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை..!

பிரபல கேரள டிகை அபர்ணா நாயர், நேற்று வீட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 1, 2023 - 20:07
மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை..!

பிரபல கேரள டிகை அபர்ணா நாயர், நேற்று வீட்டில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மலையாளத்தில் கடந்த 2005-ம் ஆண்டு மாயூகம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அபர்ணா நாயர், தொடர்ந்து நிவேத்யம், நோட்புக், ரன் பேபி ரன், மேகதீர்த்தம், ஒரு குட்டி சோத்யம், காக்டெய்ல், நொடிகள், உணர்தல் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

படங்களை தவிர்த்து இவர் சந்தன மழை, தேவஸ்பர்ஷம் மற்றும் மைதிலி வீண்டும் வரும் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

பிரபலமான சின்னத்திரை நடிகையாக இருந்து வந்த அபர்ணா நாயர், திருவனந்தபுரம் கரம்னா என்ற பகுதியில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். 

தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர் நேற்று மாலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.  

அவரது உடலை மீட்ட குடும்பத்தினர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து போது, அபர்ணா நாயர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த திடீர் சம்பவம் குறித்து போலீசார் தங்களது விசாரணையை துவங்கியுள்ளனர்.

நடிகை அபர்ணா நாயரின் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? போன்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகின்றது. 

மேலும், நடிகை அபர்ணாவுடன் தொடர்புடையவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!