கேரளாவில் ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

டிசம்பர் 25, 2023 - 00:21
டிசம்பர் 25, 2023 - 00:23
கேரளாவில் ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக இணையதளத்தில் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பால் 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில், 128 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,000 ஆக உயர்ந்து உள்ளது.

நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்ட கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 296 ஆக உள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், "கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், பயப்பட வேண்டியது இல்லை. வைரஸ் தொற்றுநோய்களை நிர்வகிக்க மருத்துவமனைகள் போதுமான அளவில் உள்ளன" என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!