திரையரங்கிற்கு அமரர் ஊர்தியில் வந்த நடிகர் கருணாஸ்

விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில், ‘போகுமிடம் வெகு தூரம் இல்லை’என்ற படம் உருவாகி உள்ளது.

ஆகஸ்ட் 24, 2024 - 11:02
திரையரங்கிற்கு அமரர் ஊர்தியில் வந்த நடிகர் கருணாஸ்

விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில், ‘போகுமிடம் வெகு தூரம் இல்லை’என்ற படம் உருவாகி உள்ளது.

மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டதால் திருநெல்வேலி மற்றும் சென்னையில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. 

இதில் அமரர் ஊர்தி ஓட்டுநராக விமல் நடித்துள்ளார். அவருடன் பயணம் செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் கருணாஸ் நடித்துள்ளார். 

இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதையொட்டி சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்க்க வந்துள்ளார் கருணாஸ். 

அவர் அமரர் ஊர்தியில் வந்திறங்கியது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!