ரசிகர்களுக்கு சோக செய்தி.. உலக கோப்பை தொடரில் வில்லியம்சன் இல்லை?
வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் கேப்டனாக விளையாடிய போதெல்லாம், பாவம் இன்று ஜெயிச்சிட வேண்டும் என பலரும் மனதில் நினைப்பார்கள்.

உலக கிரிக்கெட்டில் சில வீரர்கள் மட்டும்தான் அனைவருக்குமே எந்த பாகுபாடும் இன்றி பிடிக்கும். அந்த அளவிற்கு அனைவரின் உள்ளத்தையும் வசீகரத்தால் கவரக்கூடியவர்கள் அப்படிப்பட்ட ஒரு வீரர் என்றால் அது கேன் வில்லியம்சன் தான்.
வில்லியம்சன் நியூசிலாந்து அணியின் கேப்டனாக விளையாடிய போதெல்லாம், பாவம் இன்று ஜெயிச்சிட வேண்டும் என பலரும் மனதில் நினைப்பார்கள்.
2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அர்சி இறுதிப் போட்டியின் இந்தியா நியூசிலாந்து இடம் தோற்று போது பரவால்ல இம்முறையாது வில்லியம்சன் வெல்ல வேண்டும் என பல ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் 2019 உலகக்கோப்பை தொடரில் இறுதி ஆட்டத்தில் போட்டி சமனில் முடிந்தும் சூப்பர் ஓவரும் சமநிலை முடிந்தும் பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை முதல்முறையாக வெல்ல வேண்டும் என நினைத்த நியூசிலாந்து அணி வீரர்களின் வில்லியம்சன் ரசிகர்களுக்கு தற்போது ஒரு சோக செய்தி காத்திருக்கிறது.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது குஜராத் அணியில் விளையாடி வந்த வில்லியம்சன் பீல்டிங் செய்யும் போது காயம் அடைந்தார்.
மேலும் காயம் நினைத்ததை விட அதிகமாக இருந்தால், அவர் தன்னுடைய நாட்டுக்கு திரும்பினார்.அப்போது அவருக்கு முட்டிக்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இதிலிருந்து மீண்டு வரும் முயற்சியில் வில்லியம்சன் ஈடுபட்டு வருகிறார்.
அது வேற வாய்.. இது வேற வாய்! தோனி குறித்து யுவராஜ் சிங்கின் இரட்டை பேச்சு!
அப்போது பேசிய வில்லியம்சன் உலகக் கோப்பை தொடரில் தான் விளையாடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான் என்று கூறியுள்ளார். மேலும் உடல் நலத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், ஆனால் அந்த பயணம் நினைத்ததை விட தோய்வாக இருப்பதாகவும் வில்லியம்சன் வேதனை தெரிவித்தார்.
எனினும் உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற ஊக்கத்தில் தான் பயிற்சி செய்து வருவதாகவும், அந்த தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோளுடன் பயிற்சி செய்து வருவதாகவும் வில்லியம்சன் தெரிவித்தார்.
தற்போது நியூசிலாந்த அணி இங்கிலாந்துக்கு சென்று டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் வில்லியம்சன் பங்கேற்கவில்லை என்றாலும், அணியினருடன் சேர்ந்து பயிற்சி செய்வதற்காக இங்கிலாந்து செல்கிறார்.