அது வேற வாய்.. இது வேற வாய்! தோனி குறித்து யுவராஜ் சிங்கின் இரட்டை பேச்சு!
இந்திய கிரிக்கெட் அணியின் இளவரசன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர் தான் யுவராஜ் சிங். இவர் நேற்று அளித்த பேட்டி ஒன்று தற்போது தோனி ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் இளவரசன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர் தான் யுவராஜ் சிங். இவர் நேற்று அளித்த பேட்டி ஒன்று தற்போது தோனி ரசிகர்களை கோபப்படுத்தி இருக்கிறது.
நேற்றைய பேட்டி ஒன்றில் தோனிக்கு சிறந்த அணி கிடைத்ததால் தான் அவர் பல கோப்பைகளை வென்றார் என்றும் அடுத்த கேப்டனாக நான்தான் வரிசையில் இருந்தேன் என்றும் கூறினார்.
ஆனால் தோனி எங்கேயோ இருந்து திடீரென்று கேப்டனாக வந்து விட்டார் என்று குறிப்பிட்ட யுவராஜ் சிங், தமக்கும் பிசிசிஐயில் உள்ள சில நிர்வாகிகளுக்கும் மனக்கசப்பு இருந்ததால் தமக்கு கேப்டன் பதவி கிடைக்காமல் போய்விட்டதாக அவர் வேதனை தெரிவித்தார்.
இப்படி தோனி மீது அவரும் அவருடைய தந்தையும் பலமுறை வன்மத்தை கக்கியிருக்கிறார்கள்.
ஒரே ஓவரில் 3 விக்கெட் எடுத்தும் இந்தியா தோல்வி.... ஹர்திக் செய்த மெகா தவறு!
இப்போது தோனி சிறந்த அணியை வைத்திருப்பதால் தான் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூறிய அதே யுவராஜ் தான் 2019 ஆம் ஆண்டு தோனியை புகழ்ந்திருக்கிறார்.
அப்போது பேசிய அவர் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் இருந்து சிறந்த செயல்பாட்டை வெளிக்கொண்டு வருவதில் தோனி வல்லவர். இதனை அவர் பல ஆண்டுகளாக செய்து வருகிறார்.
இளம் வீரர்களிடம் அவர் பணிபுரிந்து அவர்களுக்கு துணையாக நிற்கிறார். விராட் கோலி போன்ற அடுத்த தலைமுறை வீரர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிறார் என்று கூறியிருந்தார்.
இது மட்டுமல்ல தற்போது அடுத்த கேப்டன் நானாக தான் வந்திருப்பேன் என்று யுவராஜ் சிங் கூறியிருக்கிறார் அல்லவா? இதுவே 2007 ஆம் ஆண்டு அவர் என்ன சொன்னார் தெரியுமா ?
இந்திய அணியின் கேப்டன் யார் என்பதில் முக்கியமில்லை. 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அணியை தோனி சிறப்பாக வழி நடத்தினார். தற்போதைய சூழலில் தோனி தான் சிறந்த கேப்டன் என்று யுவராஜ் சிங் கூறியிருந்தார்.
இந்த இரண்டு பேட்டிகளையும் குறிப்பிட்டு யுவராஜ் சிங்கை பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். அது வேற வாய் இது வேற வாயா என்று விமர்சித்து வருகிறார்கள்.
தோனியுடன் நட்பில் இருந்த பல வீரர்களும் தற்போது அவரைப் பற்றி விமர்சிக்கும் வகையில் பேட்டி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.