தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ள கண்டி 18 வளைவு வீதி 

மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி – மஹியங்கனை பிரதான வீதி தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.

மார்ச் 20, 2023 - 18:15
தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ள கண்டி 18 வளைவு வீதி 

மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி – மஹியங்கனை பிரதான வீதி தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.

நேற்று (19) பிற்பகல் ´18 வளைவு´ வீதியின் இரண்டாவது வளைவு பகுதியில் மண் மற்றும் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததால் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

இதனையடுத்து, வீதியில் இருந்த மண் மேடுகள் மற்றும் கற்கள் அகற்றப்பட்டு மீண்டும் அவ்வீதியில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!