ரசிகர்கள் கூச்சலிட்டதால் சோகத்தில் திரும்பிய நடிகை அனுபமா 

ஐதராபாத்தில் ஜூனியர் என்.டி.ஆரை அழைத்து படத்தின் வெற்றி விழாவை படக்குழு நடத்தினர். இந்த விழாவில் அனுபமாவும் கலந்துகொண்டார்

ஏப்ரல் 12, 2024 - 10:57
ஏப்ரல் 12, 2024 - 10:57
ரசிகர்கள் கூச்சலிட்டதால் சோகத்தில் திரும்பிய நடிகை அனுபமா 

தமிழில் 'கொடி', 'தள்ளிப்போகாதே', 'சைரன்' ஆகிய படங்களில் நடித்துள்ள பிரபல தெலுங்கு நடிகையான அனுபமா பரமேஸ்வரன் 'டில்லு ஸ்க்வேயர்' என்ற தெலுங்கு படத்தில் முத்தக்காட்சியில் நடித்ததை பலரும் அவதூறாக விமர்சித்தனர்.

இந்நிலையில், ஐதராபாத்தில் ஜூனியர் என்.டி.ஆரை அழைத்து படத்தின் வெற்றி விழாவை படக்குழு நடத்தினர். இந்த விழாவில் அனுபமாவும் கலந்துகொண்டார்.

அப்போது அனுபமா மேடைக்கு சென்று பேச ஆரம்பித்தார். ஆனால் ரசிகர்கள் அவரை பேச வேண்டாம் என்று கூச்சலிட்டனர். 

இதனால் அனுபமா, பேசலாமா? வேண்டாமா? என்று கேட்டார். அதற்கு ரசிகர்கள் வேண்டாம் என்று கூச்சல் போட்டனர். 

இதனால் வருத்தமடைந்த அனுபமா சரி போய் விடுகிறேன் என்று சொல்லி சிலருக்கு நன்றி கூறி விட்டு சோகத்தில் திரும்பி சென்றார். இது குறித்தான வீடியோ இணையத்தில் வைரலானது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!