ஜப்பான் 46 மில்லியன் டொலர் நிதியுதவி : செந்தில் தொண்டமான் நன்றி தெரிவிப்பு!
அரச மருத்துவமனைகளுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள ஆதரவுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

அரச மருத்துவமனைகளுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள ஆதரவுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஜப்பான் அரசாங்கம் பல்வேறு வழிகளில் தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகிறது. அதன் ஒருகட்டமாக அரச மருத்துவமனைகளுக்கு தமது எரிபொருள் தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள 46 மில்லியன் டொலர் நிதியை ஜப்பான் வழங்கியுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் இலங்கைக்கு ஜப்பான் வழங்கும் உதவிகளுக்கும், அதை விரைவாக முன்னெடுத்த ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கு இ.தொ.கா நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் கடந்தகாலத்தில் எரிபொருள் தட்டுப்பாட்டால் நாடு முழுவதிலும் உள்ள வைத்திய சாலைகளில் ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்டு நோயாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
மலையக பகுதிகளில் எரிபொருள் இன்மையால் அம்புலன்ஸ் வண்டிகளில் நோயாளர்களை கொண்டு செல்வதில் வைத்தியசாலைகளில் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டிருந்ததுடன் போக்குவரத்து பிரச்சினையும் அதிகரித்து காணப்பட்டது.
ஜப்பான் அரசின் இந்த உதவியானது நாடு முழுவதும் உள்ள வைத்திய சாலைகளுக்கும் மலையக வைத்தியசாலைகளுக்கு மிகவும் பயனுடையதாகவிருக்கும்.
அத்துடன் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் ஜப்பான் அரசு இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.