நடிகர் விஷால் - சாய் தன்ஷிகா திருமண திகதி அறிவிப்பு

நடிகை சாய் தன்ஷிகா நடித்த யோகி டா என்ற படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை நடைப்பெற்றதுடன், சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துக் கொண்டார்.

மே 20, 2025 - 01:19
நடிகர் விஷால் - சாய் தன்ஷிகா திருமண திகதி அறிவிப்பு

நடிகை சாய் தன்ஷிகா நடித்த யோகி டா என்ற படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மாலை நடைப்பெற்றதுடன், சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துக் கொண்டார்.

இதன்போது, நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடைப்பெற உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த தகவலை யோகி டா படத்தின் இயக்குனர் ஆர்.பி.உதயகுமார் மேடையிலேயே அறிவித்த நிலையில், பின்னர் பேசிய நடிகை சாய் தன்ஷிகாவும், நடிகர் விஷாலும் அடுத்தடுத்து தங்களது காதல் குறித்த தகவலை உறுதி செய்தனர்.

அப்போது, நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா ஆகியோர், தங்களுக்கு வரும் ஆகஸ்ட் 29ம் திகதி திருமணம் நடைபெறவுள்ளதாக மேடையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!