களுபோவில வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை
COLOMBO (News21) – களுபோவில வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்த இரண்டு இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

COLOMBO (News21) – களுபோவில வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்த இரண்டு இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விசேட அதிகாரியொருவர் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இரு சிசுக்களின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதால், வைத்தியசாலை பணிப்பாளரிடம் விசாரணை நடத்துமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில் கஸ்பேவ பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர்.