பொலிஸ்மா அதிபரின் சேவைக் காலம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
சி.டி. விக்கிரமரத்னவின் சேவைக் காலம் கடந்த மாதம் 26ஆம் திகதி நிறைவடைந்ததையடுத்து, பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகவே இருந்தது.

சி.டி.விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ்மா அதிபராக மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெற்றிடமாகியிருந்த பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையில் நேற்று முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போதே சி.டி.விக்கிரமரத்னவின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சி.டி. விக்கிரமரத்னவின் சேவைக் காலம் கடந்த மாதம் 26ஆம் திகதி நிறைவடைந்ததையடுத்து, பொலிஸ்மா அதிபர் பதவி வெற்றிடமாகவே இருந்தது.