கடன் சலுகை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.
இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் சலுகையின் மூன்றாவது மீளாய்வுக்காக குறித்த அதிகாரிகள் குழு நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.
கடன் சலுகையின் மூன்றாவது மீளாய்வு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுவின் சிரேஷ்ட தலைவர் பீட்டர் புரூவர் உள்ளிட்ட குழுவினர் விஜயத்தின் போது ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் அவர்கள் கலந்துரையாடினர்.
இதன்போது இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.