ஐ.ம.சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளராக இனேஷ் ஜயகுமார்
தேர்தல் பரப்புரைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட அமைப்பாளரர்களை நியமிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பிலுள்ள எதிர் கட்சி தலைவர் காரியாலயத்தில் நடைபெற்றது.

தேர்தல் பரப்புரைகளுக்காக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட அமைப்பாளரர்களை நியமிக்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பிலுள்ள எதிர் கட்சி தலைவர் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது நுவரெலியா மாவட்டத்துக்கான கட்சியின் அமைப்பாளராக இனேஷ் ஜயகுமார் நியமிக்கப்பட்டார். கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ நியமன கடிதத்தை வழங்கிவைத்தார்.
கடந்த அரசாங்கங்களில் பல முக்கிய பதவிகளை வகித்து வந்த இவர் முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினருமாகிய அமரர் முத்து சிவலிங்கத்தின் மருமகன் ஆவார்.
அத்துடன், இவர் தேர்தல் பரப்புரைகள் தொடர்பான சிறப்பு தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அமெரிக்காவின் ஒரேகான் இலங்கை அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளராக இருப்பதுடன் அதனூடாக கடந்த வருடம் மாத்திரம் 194 கோடி ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இலங்கை அரசுக்கு வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.