விற்பனைக்கு தயாரான இந்தியன் Alto கார் - விலை 71 இலட்சம் ரூபாய்
இலங்கையில் மிகவும் பிரபலமான இந்தியன் சுசுகி ஆல்டோ கார் இலங்கையில் விற்பனைக்கு தயாராகியுள்ளது.

இலங்கையில் மிகவும் பிரபலமான இந்தியன் சுசுகி ஆல்டோ கார் இலங்கையில் விற்பனைக்கு தயாராகியுள்ளது.
இலங்கையில் இவ்வகை வாகனங்களின் உத்தியோகபூர்வ பிரதிநிதியான அசோசியேட் மோட்டார்வேஸ், இந்த வாகனத்தை 71 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக அறிவிக்கிறது.
இந்தியாவில் இந்த கார் ஐந்து லட்சம் இந்திய ரூபாய்க்கு விற்கப்படுகிறது, அதாவது இலங்கை மதிப்பில் சுமார் இருபது லட்சம் ரூபாய்.
இதனால், இலங்கையில் இந்த காரை வாங்கும் போது, இந்தியாவில் உள்ள விலையுடன் ஒப்பிடும் போது, வாடிக்கையாளர்கள் ஐம்பது லட்சம் ரூபாய்க்கு மேல் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.