அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா இல்லை.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்

அண்மையில் அறிவிக்கப்பட்ட பிசிசிஐ ஒப்பந்தத்தை வைத்தே ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் அடுத்த கேப்டன் இல்லை என்பதை  பிசிசிஐ புரிய வைத்துள்ளது.

மார்ச் 5, 2024 - 12:32
அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா இல்லை.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் கனவுக்கு  பிசிசிஐ கடிவாளம் போட்டுள்ளது.

அண்மையில் அறிவிக்கப்பட்ட பிசிசிஐ ஒப்பந்தத்தை வைத்தே ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் அடுத்த கேப்டன் இல்லை என்பதை  பிசிசிஐ புரிய வைத்துள்ளது.

இந்த ஆண்டுக்கான பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஹர்திக் பாண்டியா இரண்டாம் நிலையான "கிரேடு ஏ" வில் தான் உள்ளார்.

அவருக்கு மேலே "கிரேடு ஏ+" இல் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா ஆகிய நான்கு முக்கிய வீரர்கள் இருக்கிறார்கள். 

இதன் மூலம் மூத்த வீரர் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா மட்டுமல்ல, ஹர்திக் பாண்டியாவுக்கும் மேல் இரண்டு வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை பிசிசிஐ சொல்லாமல் சொல்லி உள்ளது.

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா காலமானார்... யார் இவர்?... நடந்தது என்ன? 

ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு வரக் கூடியவர் பும்ரா அல்லது ஜடேஜா தான் என பிசிசிஐ மறைமுகமாக சொல்லி உள்ளது.

என்னதான் டி20 அணி மற்றும் ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக சில தொடர்களில் செயல்பட்டாலும் டெஸ்ட் அணியைப் பொறுத்தவரை பும்ரா தான் துணை கேப்டனாக இருக்கிறார்.

அவரே ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக வர தகுதியானவர். அதே போல தென்னாப்பிரிக்க டி20 தொடரில் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டவர் ரவீந்திர ஜடேஜா. அதிக அனுபவம் மிக்கவர். 

எனவே, அவர் டி20 அணி மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக வர வாய்ப்பு உள்ளது. ஆனால், ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டால் அது தற்காலிகமான ஒன்றாகவே இருக்கும். அவருக்கு தற்போது 35 வயதாகும் நிலையில் அவரால் அதிக வருடங்கள் அணியில் இடம்பெற முடியதா நிலை உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!