கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா காலமானார்... யார் இவர்?... நடந்தது என்ன?
மருத்துவமனைக்கு சென்றதும் சிறிது நேரத்திலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனம் ஈர்த்த ரோகித் சர்மா காலமானார்.
நேற்று முன்தினம் தனது கிரிக்கெட் அகாடமியில் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்த ரோகித் சர்மா திடீரென்று மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் மருத்துவமனைக்கு சென்றதும் சிறிது நேரத்திலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2004ஆம் ஆண்டில் சர்வீஸ் அணிக்கு எதிராக ரஞ்சி கோப்பை போட்டியின் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரோஹித் ஷர்மா 2004-ல் சர்வீசஸ் அணிக்கு எதிராக முதல்தர போட்டியில் அறிமுகமானார். 2007-ம் ஆண்டு ஜெய்ப்பூருக்கு எதிராக டி20 அரங்கிலும் தனது பட்டியல் ஏ அறிமுகத்தைத் தொடங்கினார்.
தன் திறமையான பேட்டிங்கின் மூலம், 7 முதல் தரப் போட்டிகளில் பங்கேற்று 166 ரன்கள் குவித்தார். மேலும் அதிகபட்ச ஸ்கோருடன் 36 ரன்கள் எடுத்திருந்தார். நான்கு டி20 போட்டிகளில், அவர் தனது லெக்ஸ்பின் பந்துவீச்சில் ஆறு விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இவரின் கிரிக்கெட் பயணம் 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை நீடித்தது. அதன்பின் அவர் தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று RS கிரிக்கெட் அகாடமியை நிறுவினார்.
இதில் அவர் பயிற்சியாளராக கிரிக்கெட் ஆர்வமுள்ள அனைத்து வீரர்களுக்கும் தனது அறிவை வழங்கி வந்தார்.