இந்திய அணியில் போட்டி இருக்கா? பும்ரா சொன்ன அதிர்ச்சி பதில்.. விளையாடிய விதி
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டக்வொர்க் லூயிஸ் விதிப்படி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டக்வொர்க் லூயிஸ் விதிப்படி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 11 மாதத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பினார். இதனால் இந்த தொடர் மீது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.
டாஸ் வென்ற பும்ரா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர் பால்பிரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து பும்ராவுக்கு வரவேற்பு கொடுத்தார்.
எனினும் அடுத்த பந்தில் பும்ரா தாம் யார் என்பதை காட்டினார். ஸ்டம்பை குறிவைத்து பும்ரா பால்பிரின் விக்கெட்டை தூக்க அதே ஓவரில் லார்கன் டக்கரும் பெவிலியன் திரும்பினார்.
காயத்திலிருந்து திரும்பிய பும்ரா முதல் ஓவரிலேயே 2 விக்கெட்.. கதிகலங்கிய அயர்லாந்து
இதனை அடுத்து காயத்திலிருந்து திரும்பிய மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா, ஹாரி டெக்டர் மற்றும் ஜார்ஜ் ஆகியோர் விக்கெட்டை வீழ்த்த கேப்டன் ஸ்டெர்லிங் விக்கெட்டை ரவி பிஸ்னாய் தனதாக்கினார்.
இதன் மூலம் அயர்லாந்த அணி 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேம்பர் மட்டும் பொறுமையாக விளையாடி 33 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் அயர்லாந்து அணியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பேரி மெக்கார்த்தி அதிரடியாக விளையாடி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். 33 பந்துகளில் 51 ரன்களை அவர் சேர்த்தார்.
இதில் நான்கு பவுண்டரிகளும் நான்கு சிக்சர்களும் அடங்கும். கடைசி ஓவரில் மட்டும் 22 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனால் அயர்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது.
பும்ரா, பிரசித் கிருஷ்ணா,ரவி பிஸ்னாய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த ஆர்ஸ்தீப் சிங் ஒரு விக்கெட் எடுத்தார்.
இதனை அடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இதில் ஜெய்ஸ்வால் வழக்கம்போல் அதிரடியாக விளையாடி மூன்று பவுண்டரி ஒரு சிக்சர் என 24 ரன்களில் வெளியேறினார்.
திலக் வருமா முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி ஏமாற்றினார். எனினும் சிஎஸ்கே வீரர் ருதுராஜ், பொறுமையாக விளையாடி 16 பந்துகளில் 19 ரன்கள் சேர்க்க இந்திய அணி 6 புள்ளி 5 ஓவரில் இருக்கும்போது 47 ரன்களை எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து நின்றது .
அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டம் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து டக் வொர்த் லூயிஸ் விதி அமலுக்கு வந்தது. இதில் வெற்றிக்குத் தேவையான இலக்குடன் இந்தியா இரண்டு ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இரண்டாவது டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.