காயத்திலிருந்து திரும்பிய பும்ரா முதல் ஓவரிலேயே 2 விக்கெட்.. கதிகலங்கிய அயர்லாந்து

இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா , கடந்த 11 மாதங்களாக இந்திய அணியில் விளையாடவில்லை.

ஆகஸ்ட் 19, 2023 - 11:57
காயத்திலிருந்து திரும்பிய பும்ரா முதல் ஓவரிலேயே 2 விக்கெட்.. கதிகலங்கிய அயர்லாந்து

இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான பும்ரா , கடந்த 11 மாதங்களாக இந்திய அணியில் விளையாடவில்லை.

இதனால் பும்ரா இல்லாமல் இந்திய அணி பல்வேறு போட்டிகளில் தடுமாறியது. ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை, பார்டர் கவாஸ்கர் தொடர் , ஐபிஎல் என அனைத்து முக்கிய தொடர்களிலும் பும்ரா இல்லை. 

தற்போது உலககோப்பை தொடர் நடைபெற உள்ளதால், பும்ராவின் பங்கு மிகவும் முக்கியம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை ஆகிய தொடர்களை குறிவைத்த பும்ரா, அதற்கு தயாராக வேண்டும் என்று உடல்தகுதியை மேம்படுத்தினார். இந்த நிலையில் தான் பும்ரா அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கேப்டனாக திரும்பினார்.

கொல பசியில் இருக்கேன்.. உலக கோப்பை தான் வேணும்.. பும்ரா 

பும்ரா எப்படி செயல்பட போகிறார் என்று பலரும் இந்த தொடரை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்த நிலையில் தான் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பும்ரா, ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார். இதில் பும்ரா வீசிய முதல் பந்தை அயர்லாந்து வீரர் பால்பிரின் பவுண்டரிக்கு விரட்டினார்.

இதனை பார்த்து பும்ரா சிரித்தார். காயத்திலிருந்து திரும்பியதால், அவருடைய பந்துவீச்சு சரியாக இருக்காது என்று ரசிகர்கள் நினைத்தனர். இந்த நிலையில் தான் ஆட்டத்தின் 2வது பந்திலேயே பும்ரா விக்கெட்டை வீழ்த்தினார். 

11 மாதமாக பசியால் வாடிய பிறகு வேட்டைக்கு தயாரான சிங்கம் போல் பும்ரா செயல்பட்டார். பால்பிரின் 4 ரன்களில் வெளியேற, அதே ஓவரில் லார்கன் டக்கர் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். இது பும்ராவுக்கு மாஸ் கம்பேக்காக ரசிகர்கள் கொண்டாடினர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!