கொல பசியில் இருக்கேன்.. உலக கோப்பை தான் வேணும்.. பும்ரா 

அயர்லாந்து தொடருக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக பும்ரா களம் இறங்கி இருக்கிறார். சுமார் 11 மாதம் காயத்தால் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத நிலையில் தற்போது பும்ரா திரும்பி இருக்கிறார்.

Aug 18, 2023 - 08:45
Aug 18, 2023 - 08:45
கொல பசியில் இருக்கேன்.. உலக கோப்பை தான் வேணும்.. பும்ரா 

அயர்லாந்து தொடருக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக பும்ரா களம் இறங்கி இருக்கிறார். சுமார் 11 மாதம் காயத்தால் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத நிலையில் தற்போது பும்ரா திரும்பி இருக்கிறார்.

இதன் மூலம் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை தொடருக்கு பும்ரா தயாராகும் வகையில் இந்த தொடரை பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல் டி20 போட்டிக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பும்ரா, நமது கிரிக்கெட் வாழ்க்கையிலே இது மிகப்பெரிய பிரேக் என கூறியுள்ளார்.

”ஹவுஸ்புல்” சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்.. அலப்பறை கொடுக்கும் அயர்லாந்து ரசிகர்கள் ”ஹவுஸ்புல்” சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்.. அலப்பறை கொடுக்கும் அயர்லாந்து ரசிகர்கள்

இது குறித்து பேசிய அவர் நான் காயத்தில் இருந்து மீண்டு வரும்போது உலக கோப்பையை மட்டும் தான் மனதில் நினைத்துக் கொண்டேன். ஏனென்றால் உலகக்கோப்பை தொடர் வரை எந்த டெஸ்ட் கிரிக்கெட்டும் இல்லை.

இந்தியா தோல்வி.. அமெரிக்கா பறந்த அதிகாரி.. ராகுல் டிராவிட்டுடன் சந்திப்பு.. கச்சேரி ஆரம்பம்!

இதனால் என்னுடைய பயிற்சியில் நான் டி20 போட்டிக்கு தயாராகவில்லை. உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் தான் தொடர்ந்து பத்து ஓவர் ,12 ஓவர் மற்றும் 15 ஓவர்கள் என தொடர்ந்து வீசினேன்.

பயிற்சியின் போது அதிக ஓவர் வீசிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் எங்கிருந்து விட்டேனோ அங்கிருந்து தொடங்க ஆசைப்படுகிறேன். அதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறேன். எப்போதெல்லாம் நாம் மனதளவில் சோர்வாக இருக்கிறோமோ, அப்போதெல்லாம் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும்.

என் மீது உள்ள எதிர்பார்ப்பு குறித்து எல்லாம் நான் யோசிக்கவே இல்லை. என்னுடைய குறிக்கோள் இனி நான் விளையாடும் போட்டிகளை மகிழ்ச்சியாக விளையாட வேண்டும்.

ஏனென்றால் நான் நீண்ட ஒரு ஓய்வுக்குப் பின் திரும்பி வந்திருக்கிறேன். கிரிக்கெட் விளையாடுவது மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை நான் மீண்டும் உணர வேண்டும். 11 மாதத்திற்கு முன்பு நீங்கள் எப்படி பார்த்தீர்களோ, அதே போன்ற பும்ராவாக தான் இருக்கிறேன். என் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. 

கிரிக்கெட் களத்திற்கு திரும்பியதை நான் மகிழ்ச்சியாக எண்ணுகிறேன். இப்போது உடல் அளவிலும் நான் சரியாக இருப்பதாக உணர்கிறேன். காயத்தால் அவதிப்பட்டபோது கொஞ்சம் எரிச்சலாக தான் இருக்கும்.

நம் மீது நமக்கு சந்தேகங்கள் வருவதற்கு பதில் எப்படி உடல் தகுதியை மீட்க வேண்டும். எப்படி மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப வேண்டும் என்பது குறித்து நான் யோசித்தேன். என் உடலை நான் மதித்து அது காயத்தில் இருந்து குணம் அடைய சிறிது நேரம் கொடுத்தேன். 
என்னுடைய இருண்ட காலமாக நான் இதனை நினைக்கவில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடும் என்றும் நான் பயப்படவில்லை. நான் இந்த பிரச்சனையில் இருந்து எப்படி வெளியே வருவது என்பதில் மட்டும் தான் கவனம் செலுத்தினேன்.

இந்த ஓய்வு காலத்தில் எனது நண்பர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட்டேன். அதே சமயம் கிரிக்கெட் விளையாடாமல் மிகவும் மிஸ் செய்தேன். எனக்கு அதே பசி இருக்கிறது. அதற்காகத்தான் கிரிக்கெட்டுக்கு வந்திருக்கிறேன். என்னுடைய உடல் தகுதியை நான் மேலும் பலப் படுதத் நினைக்கிறேன் என்று பும்ரா கூறியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.