இந்தியா தோல்வி.. அமெரிக்கா பறந்த அதிகாரி.. ராகுல் டிராவிட்டுடன் சந்திப்பு.. கச்சேரி ஆரம்பம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் தோல்வி இந்திய அணி மீதான நம்பிக்கை ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது. 

ஆகஸ்ட் 17, 2023 - 17:00
ஆகஸ்ட் 17, 2023 - 17:00
இந்தியா தோல்வி.. அமெரிக்கா பறந்த அதிகாரி.. ராகுல் டிராவிட்டுடன் சந்திப்பு.. கச்சேரி ஆரம்பம்!

இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 49 நாட்களே உள்ளது. இதற்காக உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்க உள்ள 10 நாடுகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதேபோல் இந்திய அணியின் சரியான மிடில் ஆர்டரை கட்டமைக்க முயன்று வருகிறது. 

இதற்கான பயிற்சி களமாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து டி20 தொடரை பயன்படுத்திக் கொண்டுள்ளது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் தோல்வி இந்திய அணி மீதான நம்பிக்கை ரசிகர்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது. 

உலகக்கோப்பைக்கு தகுதிபெறாத அணியிடமே தோல்வியடைந்தால், இந்திய அணி அவ்வளவு பலவீனமாக இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளது.

இந்திய கேப்டனை மாற்றலாம்.. பிரச்சனையே ரோகித் சர்மா தான்.. பற்ற வைத்த பாகிஸ்தான் வீரர்!

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி இரு டி20 போட்டிகளில் விளையாட இந்திய அணி ஃபுளோரிடா பயணித்தது. அப்போது சொந்த காரணங்களுக்கான பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் அமெரிக்காவில் இருந்துள்ளார். 

அந்த சூழலில் இந்திய அணி அடுத்தடுத்து இரு போட்டிகளில் தோல்வியடைந்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்த ஜெய் ஷா, திடீரென தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனை சுமார் 2 மணி நேரங்களுக்கும் மேலாக நீடித்துள்ளது. இதில் ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பைத் தொடருக்கான திட்டங்கள், இந்திய அணியின் செயல்பாடுகள், அடுத்த வாரம் தொடங்கவுள்ள பயிற்சி முகாமிற்கான திட்டம் என்று ஏராளமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பைத் தொடருடன் ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவுக்கு வருவதால், அதுகுறித்த ஆலோசனையும் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்.. அஜித் அகர்கர் முடிவால் அதிர்ச்சி!

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!