இந்திய கேப்டனை மாற்றலாம்.. பிரச்சனையே ரோகித் சர்மா தான்.. பற்ற வைத்த பாகிஸ்தான் வீரர்!
இந்தியா - பாகிஸ்தான் இடையில் அரசியல் ரீதியான பிரச்சனை காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமலேயே உள்ளது.

விராட் கோலி இந்திய கேப்டனாக தொடர்ந்திருந்தால் இந்நேரம் இந்திய அணி உலகக்கோப்பைத் தொடருக்கு 100 சதவிகிதம் தயாராக இருந்திருக்கும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையில் அரசியல் ரீதியான பிரச்சனை காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமலேயே உள்ளது.
இதனால் ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடும் நிலை உள்ளது. இந்த நிலையில் ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பைத் தொடர் அடுத்தடுத்து நடக்கவுள்ளது.
இதனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 5 போட்டிகளில் மோதுவதற்கான சூழல் உள்ளது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களும் கூட ஆர்வமாக உள்ளனர்.
இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் நீக்கம்.. அஜித் அகர்கர் முடிவால் அதிர்ச்சி!
இதனால் உலகக்கோப்பைத் தொடர் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் உலகக்கோப்பை நடப்பதால், ஆசிய அணிகளில் யார் வென்றாலும் சரி என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் கூறுகையில், என்னை பொறுத்தவரை இந்திய அணி உலகக்கோப்பைத் தொடருக்கு முழுமையாக தயாராகவில்லை.
கடந்த சில மாதங்களில் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஏராளமான வீரர்கள் சோதனை செய்யப்பட்டுவிட்டனர். சீனியர் வீரர்களின் காயத்தால் அந்த இடத்தில் ஆடிய இளம் வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் இந்திய அணியும் தொடர்ந்து சோதனை செய்து கொண்டே இருந்தது.
கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் காயத்தில் இருந்து வந்தாலும், அது கொஞ்சம் ரிஸ்க் என்றே தோன்றுகிறது. 4வது பேட்டிங் வரிசை தொடங்கி 7வது பேட்டிங் வரிசை வரை யார் விளையாடப் போகிறார்கள் என்பதே புரியாமல் இந்திய அணி குழம்பியுள்ளது.
இதற்கு காரணம் கேப்டன்சியை மாற்றியது தான். ரோகித் சர்மா அல்லாமல் விராட் கோலியை கேப்டனாக வைத்திருந்தால், இந்த நேரத்தில் இந்திய அணி தயாராக இருந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.