இந்தியாவுக்கு சாதகமாக விழுந்த டாஸ்.. ரோகித் செய்த மாற்றம் .. அறிமுகமாகும் புயல்!

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று போர்ட் ஆப் ஸ்பைன் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராட்வெயிட் பந்து வீசுவதாக தேர்வு செய்தார்.

ஜுலை 20, 2023 - 23:13
இந்தியாவுக்கு சாதகமாக விழுந்த டாஸ்.. ரோகித் செய்த மாற்றம் .. அறிமுகமாகும் புயல்!

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று போர்ட் ஆப் ஸ்பைன் நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராட்வெயிட் பந்து வீசுவதாக தேர்வு செய்தார்.

இரு அணிகளும் மோதும் நூறாவது டெஸ்ட் மற்றும் விராட் கோலி விளையாடும் 500-வது போட்டி என்பதால் இந்த ஆட்டம் மீது நல்ல எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்த நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனின் ஒரு மாற்றம் செய்துள்ளது. வேதப்பந்துவீச்சாளராக முகேஷ் குமார் அறிமுக வீரராக களமிறங்குகிறார். 

இந்த நிலையில் போட்டி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பேட்டிங் செய்ய தான் முடிவு எடுத்து இருந்தோம். ஆடுகளமும் நன்றாக தான் இருக்கிறது. வெயிலும் அடிக்கிறது.

50வது டெஸ்டில் 10ஆவது சதமடித்த இலங்கை வீரர் மிரட்டல் ஆட்டம்

டெஸ்ட் போட்டி செல்ல செல்ல ஆடுகளும் கொஞ்சம் தொய்வாகும் என நினைக்கிறேன். இதனால் பேட்டிங் முதலில் செய்வதை சரிதான் என்று நினைக்கிறேன். எங்கள் அணியில் சர்துல் தாக்கூர் காயம் காரணமாக இன்று ஆட்டத்தில் விளையாடவில்லை. இதனால் அவருக்கு பதில் முகேஷ் குமாரை அறிமுக வீரராக சேர்த்திருக்கிறோம்.

இந்த இடத்திற்கு வர அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதை நினைக்கும் போது இரு அணிகளுக்கு மத்தியில் நடந்த சிறப்பான போட்டிகள் தான் நினைவுக்கு வருகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் வேகபந்துவீச்சாளருக்கு எதிராக எங்களுடைய பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதம் அனைத்துமே பிரமிக்க தக்கவை. இப்போதும் கூட நாங்கள் ரன் சேர்க்க கடுமையாக தான் தடுமாறினோம்.

ஆட்டம் மூன்று நாட்களில் முடிவடைந்து இருக்கலாம்.ஆனால் நாங்கள் ஒவ்வொரு ரன் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் எங்களை கடுமையாக போராட வைத்தார்கள். எங்கள் அணியில் பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கிறது. 

இன்றைய ஆட்டத்திலும் சரியான முடிவு வரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று ரோகித் சர்மா கூறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிரைட்வைட் கூறுகையில் ஆடுகளும் ஈரப்பதமாக இருந்ததால் அதனை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்ததாக கூறியுள்ளார்.இன்றைய ஆட்டத்தில் கிரிக் மெக்கன்ஸி அறிமுக வீரராக களம் இறங்குவதாகவும் அவர் கூறினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!