50வது டெஸ்டில் 10ஆவது சதமடித்த இலங்கை வீரர் மிரட்டல் ஆட்டம்
இதன்போது, தனது 50வது டெஸ்டில் ஆடும் தனஞ்செய டி சில்வா 10ஆவது சதத்தினை பூர்த்தி செய்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இலங்கை அணி நேற்றைய ஸ்கோர் 242 உடன் இன்று விளையாட ஆரம்பித்தது.
இதன்போது, தனது 50வது டெஸ்டில் ஆடும் தனஞ்செய டி சில்வா 10ஆவது சதத்தினை பூர்த்தி செய்தார்.
பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிடியின் பந்துவீச்சை எதிர்த்து ஆடிய தனஞ்செய டி சில்வா, 3 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் இந்த சதத்தினை விளாசினார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 312 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.