இஞ்சி விலை அதிகரிப்பு
இஞ்சிக்கு சந்தையில் காணப்படும் கேள்வியை பூர்த்தி செய்ய முடியாததால், இவ்வாறு விலை உயர்ந்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

சந்தையில் இஞ்சியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை 3,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இஞ்சிக்கு சந்தையில் காணப்படும் கேள்வியை பூர்த்தி செய்ய முடியாததால், இவ்வாறு விலை உயர்ந்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக பெய்த கன மழையினால் பயிர்கள் நாசமடைந்து, இஞ்சிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இஞ்சி விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், விவசாயிகள் விதை இஞ்சியை விற்பனை செய்வதன் மூலம் விரைவான இலாபம் ஈட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, வெளிநாட்டிலிருந்து இஞ்சியை இறக்குமதி செய்ய முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு இஞ்சி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.