பண்டிகைக் காலத்தில் முட்டை, கோழி இறைச்சி விலை அதிகரிப்பு?
விலையை அதிகரிக்க வர்த்தகர்கள் முயற்சித்தால் அதற்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும்.

இந்த பண்டிகைக் காலத்தில் முட்டை விலையில் அதிகரிப்பு ஏற்படாது என தெரிவிக்கப்படுகின்றது.
இதனை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்க வர்த்தகர்கள் முயற்சித்தால் அதற்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.