சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் புதிய கிளை திறப்பு விழா
வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் ரகு இந்திரகுமார் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.

கண்டி - அக்குறணையில் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளையின் புதிய கிளை திறப்பு விழாவும், அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு வெற்றி விழாவும், காஷ்டல் பார்க் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
வணிக உலக சர்வதேச அமைப்பின் இயக்குனர் ரகு இந்திரகுமார் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம், தமிழகத்தின் மதுரை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், சர்வதேச ஐக்கிய கலாமின் இந்திய உயர்மட்ட நிர்வாக குழு மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் கண்டி மாவட்ட இயக்குனர் ரிஸ்வான் என பல அரசியல் பிரமுககர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.
முன்னெடுக்கபப்பட்டு வரும் சில அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், மேலும் பல சிவில் அமைப்புகளின் கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பல்வேறு தீர்மானங்களும் மக்களின் எழுச்சிக்காக நிறைவேற்றப்பட்டன.