கணிதப் பூங்கா திறந்து வைப்பு
இக்கணிதப் பூங்காவினை தேசிய கலைஞரும், ஓவிய ஆசிரியருமான கலைஞர்.ஏஓ.அனல் மிகவும் சிறப்பாக முறையில் மாணவர்களின் கற்றலை இலகுபடுத்தும் நோக்கில், மாணவர்கள் விரும்பிக் கற்றக்கூடிவாறு கலைநயத்தோடு, வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பட்டிருப்பு கல்வி வலயம், போரதீவு கோட்டத்திற்குட்பட்ட மட்/பட்/திக்கோடை கணேஷா மகா வித்தியாலயத்தில் கணிதப்பூங்கா திறப்பு விழாவும் அதனை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வும், பாடசாலை அதிபர் ஆ.நித்தியானந்தம் தலைமையில், நேற்று முன்தினம் (17) நடைபெற்றது.
கல்வி அமைச்சின் "ஜெம்" திட்டத்தின் கீழ் 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்கணிதப் பூங்காவை பிரதம அதிதியாக கலந்துகொண்ட பட்டிருப்பு கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் பு.திவிதரன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக பட்டிருப்புக் கல்வி வலயத்தின் வணிகத் துறைக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் கு.திருச்செல்வம், கெளரவ அதிதிகளாக போரதீவுப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் த.அருள்ராஜா, கணிதப் பாடத்திற்கான சேவைக்கால ஆசிரியர் ஆலோசகர் எஸ்.சேகர், சகோதர பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.