ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு IMFஇல் இருந்து கடிதம்!
இலங்கையில் பொருளாதாரத்தை மேலும் உறுதிப்படுத்துவதில் ஒத்துழைக்க சர்வதேச நாணய நிதியின் தயார்நிலையை அவர் அதில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு IMFஇல் (சர்வதேச நாணய நிதியம்) இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவாவினால் (Kristalina Georgieva) நேற்று (24) அனுப்பப்பட்டுள்ள அக்கடிதத்தில், இலங்கையை மீட்சியை நோக்கிக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் தயார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் பொருளாதாரத்தை மேலும் உறுதிப்படுத்துவதில் ஒத்துழைக்க சர்வதேச நாணய நிதியின் தயார்நிலையை அவர் அதில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், கடந்த காலத்தில் பெற்றுக் கொண்ட கடினமான பெறுபேற்றைத் தொடர்ந்தும் கட்டியெழுப்புவதற்குத் தயாராகவுள்ளதாக அவர் தமது அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.