இந்த ராகத்தில் பாடினால் மழை வருமா? இளையராஜா இசையால் நடந்த சம்பவம்!
‘தூங்காத விழிகள் ரெண்டு’ என்ற ஒரு பாடல் அமைந்திருக்கும். அது இப்போது வரைக்கும் இளைஞர்களை தூங்கவிடாமல் செய்த பாடலாகும்.

இசைஞானி இளையராஜா நேற்று அவருடைய எண்பதாவது பிறந்தநாளை ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடி இருக்கின்றார். இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் படத்தில் அமைந்த ஒரு பாடலின் ரகசியத்தை பற்றிய ஒரு செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
அந்தப் படத்தில் ‘தூங்காத விழிகள் ரெண்டு’ என்ற ஒரு பாடல் அமைந்திருக்கும். அது இப்போது வரைக்கும் இளைஞர்களை தூங்கவிடாமல் செய்த பாடலாகும்.
அந்தப் பாடலின் பாடல் பதிவு ஒரு கோடை பொழுதின் பிற்பகலில் நடந்து கொண்டிருந்ததாம். அந்தப் பாடல் அமிர்தவர்ஷினி என்ற ராகத்தை அடிப்படையாகக் கொண்டதாம்.
அந்த ராகத்தில் முறையாக பாடினால் மழையையே வரவழைக்கலாமாம். அந்தப் பாடலின் ட்ராக்கை இளையராஜா பாடி முடித்ததும் அதை ஜேசுதாஸும் ஜானகியும் கேட்டிருக்கிறார்கள்.
கேட்ட உடனேயே இளையராஜாவிடம் ‘அமிர்தவர்ஷினி ராகத்துல இருக்கு. மழை வரலன்னா எங்களை திட்டாதீங்க’ என்று கிண்டல் செய்தபடி சொன்னார்களாம்.
பாடல் பதிவும் முடிந்து விட்டதாம். ஸ்டுடியோவை விட்டு வெளியே வரும்போது எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சியாம். யாரும் வீட்டுக்கு கிளம்ப முடியாத வகையில் கனத்த மழை அந்த மதியத்தில்.
யாருமே எதிர்பார்க்காத மே மாதத்தில் ஒரு நாளில் அவ்வளவு ஒரு பெரிய மழையை யாரும் எதிர்பார்க்கவில்லையாம். இந்த செய்தியை எஸ் ஜானகி ஒரு நேர்காணலின்போது கூறி இருக்கிறார்.